பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1


பதிக வரலாறு :

சிவபிரான் தனது திருவருளால் மழையைத் தருதல் அதன் பயனைப் பலரும் பிறர்க்கும் பயன்படச் செய்து வாழ்தற் பொருட் டன்றித் `தாமே தமியராய்` (குறள், 229) நுகர்தற்பொருட்டோ ஒருவர்க்கும் ஆகாதவாறு காத்து வைத்தற்பொருட்டோ அன்றென்பதற்கு அதன் பின்னர், தானச் சிறப்பு ஒரு திருமந்திரத்தானே கூறுகின்றார். இதனை வேறு பலவாற்றால் பல திருமந்திரங்களால் பின்னர்க் கூறுவாராகலின்.
ஒருவர் தமது பொருளைப் பிறர்க்குப் பயன்படச் செய்யும் முறை, `தானமும், தருமமும்` என இருவகைப்படும். அவை முறையே, `கொடை, ஈகை` எனத் தமிழில் சொல்லப்படும்.
கொடை உயர்ந் தோர்க்குக் கொடுத்தலும், ஈகை தாழ்ந்தோர்க்குக் கொடுத்தலும் ஆம் என்பது தமிழ் நூல்களில் வெளிப்படையாக அறியக் கிடப்பது. அவற்றுள் இங்குத் தருமத்தையும் தானத்துள் அடக்கி உயர்ந்ததனால் பெயர் கொடுத்தார் என்க.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.